tamilnadu

img

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம்

மன்னார்குடி, மார்ச் 8- கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம், திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் நடத்து வது என முடிவு செய்யப்பட்டி ருந்தது. இதன் தொடர்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றியக் குழு சார்பாக வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. ஒன்றியக்குழு செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி, கேஜி. ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் என். ராஜேந்திரன், வீர மணி பிவி. கனகசுந்தரம், சி. செல்லத்துரை, பழனிச்சாமி, வீர சேகரன் தேவகி துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் வாசிப்பு இயக்கத்தினை துவக்கி வைத்து கம்யூனிஸ்ட் அறிக்கை யை விளக்கி உரையாற்றினார். வாசிப்பு முகாமின் நிறைவில் கட்சி உறுப்பினர்களின் வினாக்க ளுக்கு ஐவி.நாகராஜன் தொகு த்து விளக்கமளித்தார்.

;