குடவாசல், மே 11- குடவாசல் ஒன்றியம் மேலப்பாலையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளே அதிகம் படிக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் மற்றும் உதவியாசிரியர் கற்பகம் இருவரும் சேர்ந்து பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்வில் குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் இளங்கோவன், மேலப்பாலையூர் ஊராட்சி தலைவர் சரவணபெருமாள், அங்கன்வாடி அமைப்பாளர் ஜோதி, உதவியாளர் ராஜலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் கற்பகம், உதவியாளர் கீதா கலந்து கொண்டனர்.