tamilnadu

இரவு காவலர் பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்துக! வருவாய் கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை

மன்னார்குடி, மே 20- வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களை இரவு காவ லர் பணிகளையும் பார்க்குமாறு கட்டா யப்படுத்தும் போக்கு உள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் வருவாய்துறை நிர்வாக ஆணையரையும் தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர், மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ் செல்வன், மாநில பொருளாளர் ஆர். கோவிந்தன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கும் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கும் உணவு மற்றும் அத்தியாவசி ய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தமிழ்நாடு முழுவதும் வருவாய் கிராம உதவியாளர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் முழுமையாக செயல்பட்டு வருகின்ற னர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மதுராந்தகம், காஞ்சிபுரம், விழுப்புரம், வண்டலூர், திருப்போரூர், விருதுநகர் ஆகிய வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலு வலகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அலுவலகங்களில் வருவாய் கிராம உதவியாளர்களை கொரோனா தடுப்பு பணி என்ற பெயரில் பழி வாங்கும் உள்நோக்குடன் இரவு காவலர் பணிகளை கட்டாயமாக பார்க்க வேண்டும் என நிர்பந்திக்கும் நிலை உள்ளது.

இது  உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு காவலர் பணியில் இருந்த தங்க பாண்டியன் என்ற கிராம உதவியா ளர் கூடுதல் பணிச் சுமையால் சில  ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தி லேயே இறந்து கிடந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் காலியாக வைக்கப்பட்டுள்ள இரவு காவலர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.  வருவாய்துறை நிர்வாக ஆணையர் மற்றும் தமிழக அரசு மேலே கூறப்பட்ட சங்கத்தின் கோ ரிக்கைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.