tamilnadu

புத்தகத் தினத்தையொட்டி கிராம வாசிப்பு முகாம்கள்

மன்னார்குடி, ஏப்.22-திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் பொறியாளர் எஸ்.வி.கனகசபை பிள்ளை நடமாடும் நூலகத்தை ஏற்படுத்தினார். இந்த நடமாடும் நூலகத்தை நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் 1931-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். மாட்டு வண்டியில் புத்தகங்களை அடுக்கி கொண்டு ஒரு கிராமத்தின் பொதுவான இடத்தில் நிறுத்தப்பட்டு தேவைப்படுவோர் நூல்களை எடுத்து படித்துள்ளார்கள். தற்போது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அந்த மாட்டு வண்டி பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.தற்போது உலக புத்தக தினத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிராம வாசிப்பு முகாம்கள், புத்தக பேரணி, இல்லம் தோறும் நூலகம் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புரவலர்களின் பங்களிப்போடு அரசு பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளது என மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி தெரிவித்துள்ளார்.

;