tamilnadu

ஜன.8 பொது வேலைநிறுத்தம்  பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு மத்திய தொழிற்சங்க தலைவர்கள் கண்டனம்

திருவாரூர், டிச.25- திருவாரூர் மாவட்ட காவல்துறை யின் முரண்பட்ட நடவடிக்கைகளு க்கு மத்திய தொழிற்சங்கத் தலைவர் கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற வுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விளக்குவதற்காக மத்திய தொழிற் சங்கங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துண்டு பிர சுரங்கள், சுவர் விளம்பரங்கள், வாயிற்கூட்டங்கள், தெருமுனை பிரச் சாரங்கள் என பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. திருத்துறைப் பூண்டி நகராட்சி பகுதிகள், மன்னார் குடி நகராட்சி பகுதிகளில் காவல் துறை அனுமதியுடன் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதனையொட்டி திருவாரூர் நகராட்சி பகுதிகளில் டிச.20 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்வதற்கு  திருவாரூர் நகர காவல்நிலையத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. காவல்துறை பிரச்சார நாளன்று காலை 9 மணியளவில் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தது. தொழிற்சங்க தலைவர்கள் திருத்து றைப்பூண்டி மற்றும் மன்னார்குடி பகுதிகளில் பிரச்சாரம் செய்ததை எடுத்து கூறியும் திருவாரூர் நகர காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.  இதுகுறித்து காவல்துணை கண்காணிப்பாளர் நடராஜனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கேட்டபோது, அவர் உள்ளாட்சி தேர்தல் நேரம் என்ப தால் அனுமதி வழங்க இயலாது என தெரிவித்துள்ளார். பிற இடங்க ளில் பிரச்சாரம் செய்ததை எடுத்துக் கூறியும் எஸ்பி அனுமதி தரக்கூடாது என சொல்லி மறுத்துள்ளார். தற்போது ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடை பெறவில்லை என்பதால் இந்த அனுமதி மறுப்பு சரியான நடவ டிக்கை இல்லை என தொழிற்சங்கத் தினர் கூறியும் திருவாரூர் நகர காவல்துறை அனுமதி தரவில்லை.
முற்றுகை
இதனால் திருவாரூர் நகரத்தில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. ஒரே மாவட்டத்தில் பிற்பகுதிகளில் அனுமதி வழங்கியும், திருவாரூர் நகரத்தில் அனுமதி மறுத்தும் காவல் துறை இரண்டு விதமான அணுகு முறையை கடைபிடித்துள்ளது. இது திருவாரூர் மாவட்ட காவல்சரகம் இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு காவல்கண்காணிப்பாளர்கள் உள்ள னரோ என்ற கேள்வியை எழுப்பி யுள்ளது. காவல்துறையின் இந்த நட வடிக்கைக்கு தொழிற்சங்க தலை வர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  எனவே மாவட்ட காவல்கண்கா ணிப்பாளர் பிரச்சனையில் தலை யிட்டு அனுமதி வழங்க உத்தர விடுவதன் மூலமாக பொது வேலை  நிறுத்தத்திற்கு முன்பாக வேறொரு நாளில் பிரச்சாரத்தை நடத்துவ தற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டு மென கேட்டுள்ளனர். ஒருவேளை இதே நிலை தொடருமானால் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி திருவாரூர் நகர காவல்நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிவரும் என முக்கிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிக ளான டி.முருகையன் (சிஐடியு), ஜெ.குணசேகரன் (ஏஐடியுசி), கே.எஸ்.மகாதேவன் (தொமுச), எஸ். பாண்டியன் (ஐஎன்டியுசி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

;