குடவாசல், மே 23- சிபிஎம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் 4 வார்டு மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமான், திருவாரூர் ஆட்சியரிடம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் நன்னி லம் மாவட்ட கவுன்சிலர் 4 ஆவது வார்டு உறுப்பினர் ஐ.முகமது உதுமான், திருவாரூர் ஆட்சியர் ஆனந்த்யிடம் மனு அளித்தார். அளித்த மனுவில், ஊர டங்கால் இஸ்லாம் மக்கள் ரமலான் தினத்தில் வீட்டிலிருந்தே தொழுகை நடத்தி வருகின்றனர். அரசு நடவ டிக்கையால் மக்களின் ஒத்துழைப்பு டன் திருவாரூர் மாவட்டம் கொ ரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு பச்சை மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரமலான் பண்டிகையை இஸ்லாமிய சகோதரர்கள் பள்ளிவாசல் சென்று தனிநபர் இடைவெளியுடன் தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள் ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறி னார். கட்சியின் நன்னிலம் ஒன்றிய குழு உறுப்பினர் கே.எம்.லிங்கம், பி.ராஜா, நிர்வாகிகள் ஆர்.சுதாகர், குத்தூஸ் பூவரசன் ஆகியோர் உடனிருந்தனர்.