tamilnadu

img

காலமானார்

குடவாசல், மார்ச் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஓட்ட நாச்சியார்புரத்தில் வசிக்கும் கொரடாச்சேரி ஒன்றிய குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவருமான ஆர்.மருதையனின் தாயார் பட்டு என்ற பட்டம்மாள் (80) புதன்கிழமை இரவு காலமானார்.  மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஒன்றியச் செயலா ளர் கே.சீனிவாசன், ஒன்றியக் குழு  உறுப்பினர் டி.ஜெயபால் ஆகியோர் மறைந்த பட்டம்மாள் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தினார். அவ ரின் இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.