மன்னார்குடி, ஜுலை 13- திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்கள் சார்பில் இயற்கை அங்காடி திறப்பு விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடை பெற்றது. விழாவில் ஆர்டி.மூர்த்தி, கனகராஜன், விவேகானந்தன், குடவாசல் தினகரன், ஏ.கே.எம்.குழுமத் தலைவர் டாக்டர் செந்தில், சேகர் கலியபெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் மாசிலாமணி, வர்த்தகர் சங்கத் தலைவர் பால முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தமிழாசிரியர் தமிழமுதன், புலவர் சண்முக வடிவேல், விவசாய சங்கத் தலைவர் பாண்டியன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். விழா ஏற்பாடுகளை கல்வி க்குழு உறுப்பினர் சீலர், பள்ளி தலைமையாசிரியர் சுந்தர், முதுகலை உதவி தலைமையாசிரியர் அகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.