tamilnadu

img

தியாகி நாவலன் நினைவு தினம்

குடவாசல், ஜன.19- திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியத்தில் உள்ள பேர ளம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தியாகி ஜெ.நாவலன் 9 ஆவது நினைவு தினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற போராளி ஜெ.நாவலன் சமூக விரோதி களால் படுகொலை செய்யப் பட்ட நாள் ஜனவரி 19. அவர் நினைவாக இந்த நாளில் ஆண்டுதோறும் நன்னிலம் ஒன்றியம் சார்பாக பேரளத்தில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தியாகி நாவலனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் இருந்து தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக ரத்ததான முகாம் மக்களுக்கு பயன் பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 30 வாலி பர் சங்க இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினர். அனை வருக்கும் சான்றிதழ்களை அரசு மருத்துவர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வரத.வசந்த பாலன், ஒன்றிய ரத்ததான கழக கன்வீனர் ஏ.அப்துல் குத்தூஸ் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாவட்ட பொருளாளர் எஸ். இளங்கோவன், துணை செய லாளர் ஏ.கே.வேலவன் முன் னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஜெ.தீபா முகாமை துவக்கி வைத்தார். வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய செய லாளரும், சிபிஎம் மாவட்ட கவுன் சிலர் ஜெ. முகமது உதுமான் கலந்து கொண்டார். மாநில குழு உறுப்பினர் மைதிலி, மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சலாவு தின், மாவட்ட ரத்ததான கழக கன்வீனர் கோ.சி. மணி, மாவட்ட துணைத்தலைவர் ஆர்.எஸ் சுந்தரையா, மாவட்டக்குழு சர வணா சதீஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரும், வாலிபர் சங்க ஒன்றிய செய லாளருமான பி.ஜெயசீலன், ஒன்றிய பொருளாளர் எஸ்.சுரேந்தர், குடவாசல் வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய செயலா ளர் வி.தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒன்றிய துணை செயலா ளர் கவிஞர் வரத.வரதராஜன் நன்றி கூறினார்.
கரூர்
அஞ்சான், நாகூரான், ஞான சேகரன், ஜெ. நாவலன் தியாகி கள் தின கூட்டம் தமிழ்நாடு விவ சாய சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம், சிஐடியு சங்கங்க ளின் கரூர் மாவட்டக்குழு சார் பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.  விச சங்க மாவட்ட துணை தலைவர் கே.சக்திவேல் தலை மை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில இணைச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி சிறப்புரையாற்றினார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி. முருகேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி.இலக்கு வன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இரா. முத்து செல்வன் ஆகியோர் பேசி னர். சங்க நிர்வாகிகள் முனி யப்பன், ரத்தினம், ஹரிராமன் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

;