tamilnadu

img

இந்தியன் வங்கி சார்பில் மகளிர் தின விழா

மன்னார்குடி, மார்ச் 13- இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் வங்கி தொடர்பாளர்க ளுக்கான மகளிர் தின விழா வங்கியின் மன்னார்குடி கிளை வளாகத்தில்  நடைபெற்றது.  அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வா தார இயக்கம் ஆகிய திட்டங்களின் மாவட்ட  திட்ட இயக்கு னர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.20 கோடி கடன் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்ட இயக்குனர் பேசும்போது,  மகளிர் மேம்பாடு அடைய மற்றும் பொருளா தார சுதந்திரம் பெற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் வங்கி கடன் பெற்று சுயதொழில் செய்து வாழ்வில் வளம் பெற வேண்டும், இதுபோன்ற கடன் உதவி வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி திருவாரூர் மண்டலத்தை மிகவும் பாராட்டுகிறேன் என்று  பேசினார்.  விழாவில் வங்கியின் திருவாரூர் மண்டல துணை மேலாளர் மு.செல்வநாயகம், தஞ்சை எல்.ஐ.சி கோட்ட அலுவலக முதன்மை மேலாளர் முருகன் ஆகியோர் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு இந்தியன் வங்கியின் சேமிப்பு, கடன், காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களினால் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி, எல்.ஐ.சியின் ஆதார் ஷீலா திட்டம் மற்றும் அடல்பென்சன் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயன் பெறுவது குறித்து விரிவாக பேசினார்கள்.  நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சுயஉதவிக் குழுக்க ளுக்கும், வங்கி வணிக தொடர்பாளர்களுக்கும் விருது வழங்கி னார். முன்னதாக வங்கியின் மன்னார்குடி கிளை முதன்மை மேலாளர் பி.எஸ்.கலா வரவேற்க, மன்னார்குடி மகளிர் சுயஉதவிக்குழு சிறப்பு கிளை மேலாளர் விக்னேஷ் நன்றி கூறினார். வங்கி மன்னார்குடி கிளையின் உதவி மேலாளர் மதன்ராஜ், கோபாலசமத்திரம் கிளை மேலாளர் லெட்சுமி நாயுடூ, களப்பால் கிளை மேலாளர் எஸ்.கனேசன் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.