மன்னார்குடி, மே 28- தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின், ஆயுஷ் வழிகாட்டுதலின்படி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆர்சனிக்கம் ஆல்பம் 30C என்ற ஹோமியோபதி மருந்தினை இந்திய ஹோமியோபதி மருத்துவ குழுமத்தின் சார்பாக மருத்துவர்கள் வே.ஈஸ்வரமூர்த்தி அபர்ணாஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மன்னார்குடி மின்சார வாரிய நகர உதவி செயற்பொறியாளர் சா.சம்பத், இளநிலைப் பொறியாளர் க.கண்ணன் ஆகியோர்களிடம் சுமார் 1000 குடும்பங்களுக்கு தேவையான அளவிற்கு வழங்கினர். முன்னதாக அவர்களிடம் கொரோனா நோய் குறித்தும் மருந்து எடுத்து கொள்ளும் முறை பற்றியும் விவரித்தனர்.