tamilnadu

img

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 23-  திருவாரூர், நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நோயாளிகளை தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கூடிய நிலை உள்ளது. இங்கு எந்த ஒரு சிறப்பு சிகிச்சையும் அளிக்க முடியாத நிலை தான் தொடர்கிறது. இதனால் நோயாளிகள், மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உள்ளது. அதனால் திருத்துறைப் பூண்டியில் அண்ணா சிலை அருகில் உள்ள அரசு பெண்கள் மருத்துவ மனை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளு க்கு மேலாக பெண்கள் மகப்பேறு மருத்துவமனை ஆக இருந்து, ஆறு ஆண்டுகளாக பாரதிதாசன் மாதிரி கல்லூரி இயங்கி வந்தது. அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. அதில் ஆயிரம் படுக்கை வசதி, மருத் துவர்கள் தங்குவதற்கும், நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் வென்டிலேட்டர் வைப்பதற்கும் இடம் விசாலமாக உள்ளது.  

இந்த இடத்தினை கொரோனா வார்டாக மாற்றினால் கொரோனா பரவல் தடுக்கப்படும். இந்த இடத்தை பார்வையிட்ட திமுக திருத் துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன் கூறுகையில், இந்த இடத்தில் கொரோனா வார்டாக மாற்றினால் அதற்கு தேவையான உபகரணங்களை எனது நிதியில் இருந்தும், தொகுதி நிதியில் இருந்தும் பெற்று தருவதற்கு முயற்சி செய்வேன் என்றார். திமுக இளை ஞர் அணி மாவட்ட துணை செயலா ளர் இளையராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகேசன், திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டி யன், காங்கிரஸ் கட்சி எழிலரசன், விடுதலை சிறுத்தை கட்சி மைக்கேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

;