tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  எதிர்ப்பு: 430 பேர் மீது வழக்கு

திருவாரூர், ஜூன் 2- காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மத்தியபாஜக அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 430 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக விளை நிலங்களை அழிக்கும், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்றுகூறி அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், கோட்டூர்,மன்னார்குடி, நீடாமங்கலம், நான்காம்சேத்தி, சேரன்குளம் உள்ளிட்ட 13 இடங்களில் ஜூன் 1 போராட்டங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களில் வயல்களிலும் குளங்களிலும் இறங்கிவிவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 80 பெண்கள் உள்பட 430 பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

;