tamilnadu

img

நீடிப்பதற்கு தகுதியற்றது எடப்பாடி அரசு திருவாரூரில் பிரகாஷ் காரத்

கோவில்பட்டி/திருவாரூர், ஏப். 9-

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி என்றும் ஐந்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும் தங்களது சாதனைகளாக எதையுமே சொல்ல முடியாத நரேந்திர மோடி புதிய வாக்குறுதிகளை கூறி மீண்டும் மக்களை மோசடி செய்ய முயற்சிக்கிறார் என்றும் இவர்களை இத்தேர்தலில் வீழ்த்தி மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி மலர தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று தங்களது தமிழகப் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் அழைப்பு விடுத்தனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்தும், தமிழகத்தின் இதர தொகுதிகளில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.செவ்வாயன்று, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றினார். திருவாரூரில் திங்களன்று இரவு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாகப் பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி சிபிஐ வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரகாஷ் காரத் உரையாற்றினார்.


தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரிய சக்தி அல்ல. எனவேஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சிலஇடங்களையாவது பிடித்துவிடலாம் என்று அக்கட்சிகனவு காண்கிறது. தமிழக வரலாற்றிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகஅரசு தான் மிக மோசமான ஆட்சியை நடத்தி யிருக்கிறது. தமிழக மக்களின் நலன்களையும் தமிழகத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் மோடி அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறது. இதுவே அதிமுக கூட்டணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங் கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இந்த மக்களை துயரத்தின் பிடியிலேயே நிர்கதியாக விட்டுவிட்டன. சொற்ப தொகையை நிவாரணமாக அறிவித்தன.அண்மையில் கேரளத்தில் கடந்த நூறாண்டு களில் கண்டிராத அளவிற்கு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அவர்களின் மறுவாழ்வுக்காக கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு தலா ரூ.4லட்சம் வழங்கியது. ரூ.21 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதை கணக்கிட்டு, அந்தத் தொகையைமத்திய அரசிடம் பெறுவதற்காக மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியது. ஆனால் மோடி அரசு கேரள மக்களை வஞ்சித்தது. எனினும் அந்த சவாலை பினராயி விஜயன் தலைமையிலான அரசுதுணிச்சலுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொ ண்டது. ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது?இங்குள்ள எடப்பாடி அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை மோடி அரசு தராத நிலை யிலும் கூட அவர்களுக்கு சேவகம் செய்து வருகிறது. இத்தகைய மக்கள் விரோத அரசை, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அதே நேரத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலைப் பயன்படுத்தி தூக்கியெறிய வேண்டும். நீடிப்பதற்கு தகுதி இல்லாத எடப்பாடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.


;