tamilnadu

img

ரூ.7500 நிவாரணம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மே 12- கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்திற்கு நிவாரண தொகையாக ரூ 7500 அளிக்க வேண்டும். 100 நாள் வேலையை கிராமங்களில் தொடர்ச்சியாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வையகளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஎஸ்.கலியபெருமாள், தொழி லாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஒளிமதி ஊராட்சி அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.கென்னடி தலைமை வகித்தார். பி.பாண்டி, எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவங்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.கை லாசம் தலைமை வகித்தார். எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மேலாளவந்தசேரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வீ.பூசாந்திரம் தலைமை வகித்தார். ரிஷியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சோம ராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். மருத ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பெரம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.மோகன சுந்தரம் தலைமை வகித்தார். கானூர் ஊராட்சி மன்றக் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.முனியாண்டி தலைமை வகித்தார். ஏ.அருளானந்தசாமி, எஸ். சவுரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;