குடவாசல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு பேரவை கொரடாச்சேரியில் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை ஏற்று துவக்க உரையாற்றினார். மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களில் பொதுமக்களிடம் இருந்தும், கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து திரட்டிய கட்சி வளர்ச்சி நிதியை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். நிதியினை பெற்றுக் கொண்டு அவர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சிபிஎம் கோட்டூர் ஒன்றிய குழு உறுப்பி னர் மாரியப்பன் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம் அரவனங்காடு சிபிஎம் ஊராட்சி தலைவர் சுலக்சனா லோகநாதன் ஆகியோர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனு க்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். பேரவையில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், ஜி.பழனிவேல், எம்.சேகர், பி.கந்தசாமி, எம்.கலைமணி, சி.ஜோதிபாசு, கே.தமிழ்மணி, கே.ஜி.ரகுராம் மற்றும் மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.