குடவாசல், டிச.17- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வட கண்டம் ஊராட்சி மன்ற தலை வருக்கு பூபதி கோபி ராஜ், செம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கு செம்மங்குடி கட்சி கிளை உறுப்பினர் ஆர்.முருகேசன் ஆகியோர் வேட்புமனு அளித்தனர். 7-ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மருதையன், 17ஆவது வார்டு ஒன்றியக்குழு கவுன் சிலருக்கு மாதர் சங்க முன்னாள் ஒன்றிய செயலா ளர் அமுதா செல்லத்துரை ஆகியோர் வேட்புமனு அளித்தனர். விஸ்வநாதபுரம் ஊராட்சி 6 ஆவது வார்டு உறுப்பினருக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினரும் முன்னாள் மாதர் சங்க ஒன்றிய செயலாளரு மான ஜெயலட்சுமி சேகர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.