tamilnadu

குழந்தை தொழிலாளர்களை அறிந்தால் புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர், ஆக.5- கடந்த ஜுலை 2020 மாதத்தில் திருவாரூர் மாவட்டத்தில்,  வாத்து மேய்ப்பதற்கு குழந்தைத் தொழிலாளர் முறையில்  வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடை  செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் இளை ஞர் நீதிச் (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2015இன்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலை க்கு அமர்த்துவதையும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை  அபாயகரமான பணியிலும் அமர்த்த தடை செய்ய ப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் சட்டத்தினை மீறி  தடை செய்யப்பட்ட வேலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால், இளைஞர் நீதிச் (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2015 பிரிவு 79- இன்படி, ஐந்து ஆண்டுகள் வரை கடுஞ்சிறைத் தண்டனை யும் மற்றும் ரூ.1,00,000 வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தைத் தொழிலாளர் எவரையேனும் கண்ட றிந்தால், புகாரினை பென்சில் எனும் வலைதளத்தில் (www. pencil.gov.in) பதிவு செய்யலாம். மேலும், சைல்டு லைன்  -1098 எனும் கட்டணமில்லா தொலைபேசி மூலமாக அல்லது திருவாரூர்-610 004, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக இணைப்புக் கட்டடம், அறை எண்.310, ரூ 311, மூன்றா வது தளத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலகிற்கு (04366–226 299, dcpstvr@gmail.com, அலை பேசி எண்.9790052827) தகவல் தெரிவித்து உதவிட கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

;