tamilnadu

img

கண்துடைப்பாக நடைபெறும் தூர்வாரும் பணிகள்

திருவாரூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் 29 பெரிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் இருந்து பிரியும் முக்கிய வாய்க்கால்களாக ஏ,பி,சி, ஆகிய வாய்க்கால்கள் மொத்தம் 40,000  கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவிக்கிடக்கின்றன. 

இந்த முக்கிய வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இந்த ஆண்டு ரூ. 67 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த தொகையில் ஏ,பி,சி வாய்க்கால்களில் மொத்தம் 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே தூர் வார முடியும். இது மொத்த தூரத்தில் 5 சதவீதம் தான். இதுபோன்று தூர்வாரும் போது ஒரு பகுதியை தூர்வாரி முடிப்பதற்குள் அடுத்தவாய்க்காலில் தூர் மண்டி விடுகிறது. ஏ,பி,சி வாய்க்கால்களில் முழுவதுமாக தூர்வார வேண்டும் என்றால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்காவது தூர்வாரப்பட வேண்டும்.

அப்படி தூர் வாரினால் தான் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு அடுத்த 10 நாட்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.இந்த ஆண்டுக்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப் பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த வேளாண்உற்பத்தி ஆணையரும்,சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான சுகன்தீப்சிங் பேடி,300 இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடப்பதாகவும் 70 சதவீதபணிகள் முடிந்துவிட்டதாகவும்கூறுகிறார். 300 இயந்திரங்களின் பதிவுகளை வெளியிட முடியுமா?அனைத்தும் உண்மைக்கு மாறானவை. கண்துடைப்பாக அனைத்தும்நடந்து வருகிறது. ஆறுகளில் தூர்வாரும் போது அந்த மண்ணை எடுத்து ஆற்றின் மறுகரையில் போட வேண்டும். ஆனால் ஆற்றின் பக்கவாட்டிலேயே மண்ணை வைத்து அணைக்கின்றனர். 

அடை மழையின் போது இந்த மண் கரைந்து மீண்டும் ஆற்றுக்குள் வந்து விடும் .இத்தகைய தரமற்ற பணிகளால் எந்த பயனும் இல்லை. இப்படி கண்துடைப்புக்காக நடக்கும் தூர்வாரும் பணிகளால் விவசாயிகள் முழுமையாக பயன் பெற முடியவில்லை. இதனால் வழக்கம்போல் இந்த ஆண்டும்விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவிவசாய சங்க தலைவர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.இந்நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்குள் வந்து சேருவதற்குள் தூர்வாரும் பணி என்பது அவசர கதியில் தான் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

===ஆரூரான்===

;