tamilnadu

மின்வாரிய அலுவலருக்கு விருது

மன்னார்குடி: மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சா.சம்பத்துக்கு, மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், கிளை செயலர் ரா.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மின்வாரியத்தில் துறை ரீதியாக பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காகவும், தேசிய பயிற்சியாளராக ஜேசிஐ அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக நோக்கோடு விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதற்காகவும் பொறியாளர் சா.சம்பத்துக்கு நிகழாண்டுக்கான சிறந்த சமூக சேவை விருது வழங்கப்பட்டது.