மன்னார்குடி, ஜூலை 22- மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் என்ற அமைப்பால் அதன் சர்வதேச பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை யடுத்து இருதய மற்றும் மூளை பாதிப்புகளால் பாதிக்கப்படும் குழந்தை கள், இளம் வயதினருக்கான அடிப்படை மற்றும் மேம்பட்ட மருத்துவ பாதுகாப்பு அளித்தலில் மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத பணியா ளர்களுக்கு பயிற்சியளிக்க தகுதி பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்திற்கான ஒப்புதல் கடிதம் வெளியிட்டு மருத்துவ மனை தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் பத்திரிகையாளர்களிடம் தெரி வித்ததாவது: மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை அவசர நிலை சிகிச்சை வழங்குவதில் தென் தமிழகத்தில் முதன்மை மையமாகவும், பிற மருத்துவ மனைகளுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அவசர நிலை களில் அடிப்படை மற்றும் மேம்பட்ட உயிர்காக்கும் சிகிச்சை முறைகளைப் பணியாளர்களுக்கு கற்பித்தல் எமது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கிறது. முதலுதவி மற்றும் இதய இயக்க மீட்பு மற்றும் தானியக்க குறுநடுக்க மெடுப்பி ஆகியவற்றில் போதுமான பயிற்சியில்லாத காரணத்தால் உயி ரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மதுரை இருதய இயக்க மீட்பு அறி வியல் மற்றும் பயிற்சியில் ஏ.எச்.ஏ. எனப்படும் அமெரிக்கன் ஹார்ட் அசோ சியேசன் உலகளவில் முதன்மையானது. இருதய மற்றும் மூளை பாதிப்பி னால் அவதியுறும் நோயாளிகளுக்கு, அவசர உயிர்காக்கும் சேவை களை வழங்குவதற்கு மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத பணியா ளர்களுக்கு பயிற்சியளிக்கும். இதனால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப் படும் என்று எஸ்.குருசங்கர் கூறினார். மேலும் மருத்துவமனையின் அவசர நிலை மருத்துவத் துறை தலை வர் டாக்டர் நரேந்திர நாத் ஜனா பேசும்போது, உலகளவில் உயிரிழப்பிற்கு முதன்மைக் காரணமாக இருதய நோயும், இரண்டாவதாக பக்கவாத மும் விளங்குகின்றன. இந்தியாவின் சராசரி இறப்பு விகிதம் உலக இறப்பு விகிதத்தை விட அதிகமானது. இதனை குறைப்பதற்கு அமெ ரிக்கன் ஹார்ட் அசோசியேசன் அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனித உருப்படிகளின் உதவியுடன் உயர்தரமான நேரடி பயிற்சி தரப்படு கிறது என்று டாக்டர் நரேந்திரநாத் ஜனா கூறினார்.