tamilnadu

img

திருவள்ளூர்: சூரிய கிரகணத்தை 10 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்

திருவள்ளூர், டிச.26-  திருவள்ளுர் மாவட்டத் தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும்  பள்ளி மாணவர்களுக்கும்., பொது மக்களுக்கும் கண்ணாடி களை விநியோகித்து சூரிய கிரகண நிகழ்வை பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர். திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளியில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மோசஸ் பிரபு, மாவட்ட துணை நிர்வாகிகள் வேலாயுதம் சாந்தகுமாரி, ராஜகுரு ஆகியோர் கலந்து கொண்டு சூரிய கிரகணம் குறித்து அறிவியல் பூர்வ மான கருத்துக்களை பள்ளி மாணவர்களுக்கு எடுத்து ரைத்தனர். அதேபோல், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும்  கிர கணம் காணும் நிகழ்ச்சி நடை பெற்றது. அறிவியல் இயக்கத்தின் திருத்தணி மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.லதாபழனி  ஒருங்கிணைப்பில், ஒன்றிய துணைத் தலைவர் கோபி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பாலசுந்தரம், தன சேகரன், மாவட்டத் தலைவர் முனைவர் அ.கலைநேசன் ஆகியோர் விளக்க உரை யாற்றினர். வட்டார வளர்ச்சி அலு வலர்,துணை வட்டாட்சி யர் உள்ளிட்ட அரசு அலு வலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என  800 பேர் ஒரே இடத்தில் கூட பிரித்தி யோக  கண்ணாடி கொண்டு சூரிய கிரகணத்தை பாத்த னர். அறிவியல் இயக்கத்தின் ஏற்பாட்டின் மூலம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் 10ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சூரிய கிரகணத்தை கண்டுகளித்த னர்.

;