tamilnadu

மணல் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

திருவள்ளூர் நவ-4  கட்டுமான தொழிலை பாதிக்கும் மணல் தட்டுப்பாட்டை தமிழக அரசு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஆவடி தொகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. கட்டுமான சங்க ஆவடி தொகுதியின் 18-வது  ஆண்டு பேரவை காமராஜபுரத்தில் உள்ள வி.பி.சிந்தன்   அலுவலகத்தில் நவ-3 அன்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பகுதித் தலைவர் மா.பூபாலன் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் எஸ்.முருகேசன் சங்க கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் லெனின்சுந்தர் துவக்கவுரையாற்றினார். பகுதி செயலாளர் இ.கங்காதுரை வேலை அறிக்கையை வாசித்தார்.பொருளாளர் ஏ.நடராஜன் வரவு செலவு கணக்கை முன்மொழிந்தார். சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் லூர்துசாமி வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலைவர் வீர.அருண் நிறைவுரையாற்றினார். 

புதிய நிர்வாகிகள்
தலைவராக இ.கங்காதுரை, செயலாளராக எஸ். முருகேசன், பொருளாளராக ஏ.நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்.
கட்டுமான நலவாரிய பண பயன்களை விண்ணப்பித்த 1-மாதத்தில் வழங்க வேண்டும், பெண்களுக்கு 50-வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காட்டுமான நலவாரியத்தில் சேர்ந்து கிடக்கும் பணத்தை கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்த  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.