tamilnadu

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க கோரிக்கை

திருவள்ளூர், அக்.16-  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு பொன்னேரியில் மாவட்டத் தலைவர் ஏ.அப்சல் அக மது தலைமையில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எம். ராம கிருஷ்ணன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். எம். அனீப் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் ஜே.ராபர்ட் எபிநேசர் வரவு-செலவு கணக்கை வாசித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராய ணன் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் நிறைவுரை யாற்றினார்.
தீர்மானங்கள்
சிறுபான்மை மாணவர்க ளுக்கான கல்வி உதவித் தொகை உடனடியாக வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும், குறைதீர்க்கும் கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும், மசூதி, தேவாலையம் கட்ட அனுமதி கேட்டு நிலுவையில் உள்ள மனுக்களை ஏற்க வேண்டும், கல்லறை தோட்டம், மற்றும் கபராஸ்தார் (சுடுகாடு) அமைக்க இடங்களை ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ். எம்.அனீப், செயலாளராக ஏ.அப்சல் அகமது, பொருளாளராக ஜே.ராபர்ட் எபிநேசர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;