tamilnadu

img

சொந்த ஊர் செல்ல முயன்ற ஒடிசா மக்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே ஊரடங்கால் செங்கல் சூளையில் வேலை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்ல முயன்றனர்.

திருவள்ளூரை அடுத்த மொன்னவேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் 65 வடமாநில தொழிலாளர்கள் தங்கி செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வேலையிழந்த அவர்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் 65 பேரும் தங்கள் குடும்பத்துடன் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு செல்வதற்காக திருவள்ளூர் வழியாக சனிக்கிழமை (ஜூலை .4) காலை நடந்தே சென்று கொண்டிருந்தனர்.இதையறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று வடமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்களை திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும் அவர்கள் பணிபுரிந்த செங்கல் சூளை உரிமையாளரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் 65 பேரையும் ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

;