சென்னை, ஜூலை 24- மோனோ சோடியம் குளூட்டா மேட் (எம்எஸ்ஜி) சீன உப்பு என்ற பலரும் தவறாக கருதுகின்றனர். அது ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எஸ்ஜியை ஜப்பானை சேர்ந்த அஜினோ மோட்டோ குழுமம் தயாரிக்கிறது.ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே நுகரவேண்டும். ஆனால் உப்புக்கு மாற்றாக எம்எஸ்ஜியை 3கிராம் எடுத்துக்கொண்டால் போதுமானது. இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையும் அதிகமாக உட்கொண்டால் அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். உப்பு என்றாலும் எம்எஸ்ஜி என்றாலும் அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்குஏற்படாது என்றும் அவர் கூறினார். “கரும்புச்சாறு, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களிலிருந்து எம்எஸ்ஜி பெறப்பட்டு நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. வெவ்வேறு பூகோள பகுதிகளிலிருந்து எம்எஸ்ஜியை தயாரிப்பதற்காக அந்தந்த இடங்களில் மிக அதிகமாக கிடைக்கின்ற தாவரப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட்சுஷி மிஷூகு கூறினார். போலியான பொருட்கள் தான் மிகவும் ஆபத்தானவை என்று அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் துறை மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் குறிப்பிட்டார்.