tamilnadu

பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்குக: சிஐடியு

 திருவள்ளூர், பிப்.24- விபத்தில் பலியான 2 தொழிலாளர்களுக்கு நிவராணமாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தி வல்லூர் அனல் மின் நிலையம் நுழைவு வாயில் முன்பு  சிஐடியு சார்பில் திங்களன்று (பிப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூர் அனல் மின் நிலை யத்தில் ஒப்பந்த தொழி லாளியாக பொன்னேரியை சேர்ந்த குணசேகரன், மணலி புது நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். இவர்கள் வியாழனன்று (பிப்.13) இரவு பணி முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, மீஞ்சூரில்  சாலையில் நிறுத்தி வைக்பட்டுள்ள நிலக்கரி லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.  உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத் திற்கு வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழி லாளர்களின்  குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும், பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழி லாளர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துதர  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், கிளை நிர்வாகிகள் சதீஷ், பிரபாகரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;