tamilnadu

ஊழலை மறைக்க கோப்புகளுக்கு தீ ஊராட்சி செயலாளர் சிறைபிடிப்பு

திருவள்ளூர், ஜன. 6- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பூங்குளம்  ஊராட்சி மன்றச் செயலாள ராக செந்தில்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே இவர் மீது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரிந்தவர்களுக்கு சேரவேண்டிய ஊதியத்தை முறைகேடாக கையாடல் செய்தது, தெருவிளக்கு குடி நீர் குழாய், கொசு மருந்து தெளித்தல் போன்ற அடிப்  படை வசதிகள் எதையும்  செய்யாமலே பொய்க் கணக்கு எழுதியதாகவும் புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில்  பூங்கு ளம் ஊராட்சி மன்றத் தலை வராக ரோஜா என்பவர் பதவி யேற்கவுள்ள நிலையில் புதிதாக பொறுப்புக்கு வரும்  ஊராட்சி மன்றத்தலைவர் கணக்கு வழக்குகளை பார்த்தால் எங்கு தான் செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்று அஞ்சி  விடுமுறை நாளான ஞாயி றன்று (ஜன-5)  ஊராட்சி மன்ற  அலுவலகத்தை திறந்து அங்கிருந்த ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து  எரித்து உள்ளார். இதனை எதேச்சியாக கண்ட ஒருவர் இது குறித்து  ஊருக்குள் சென்று முறை யிட்டுள்ளார். இதனால் கொதிப்படைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்று கையிட்ட கிராம மக்கள் ஊராட்சி செயலாளர் செந் தில்குமார் சிறைப்பிடித்து ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக வும் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையான விசா ரணை நடத்தி முறைகேட்டில்  ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவலறிந்து சம்  பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஊராட்சி  செயலாளரை விடுவிக்கும் படி கூறியதால் கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்  னர் கிராம மக்களின் பிடியி லிருந்து ஊராட்சி செயலா ளரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுச் சென்றனர். ஊராட்சிமன்றத்திற்கு புதிய  உறுப்பினர்கள் பதவி ஏற்க விருந்த நிலையில் ஆவ ணங்களை தீ வைத்து எரித்  துள்ளதால்  ஊராட்சி செயலா ளர் மீது சந்தேகம் எழுந்துள்ள தாக ஊர்மக்கள் தெரி வித்தனர்.

;