tamilnadu

வேலைவாய்ப்பு திறன் பயிற்சி  ஆட்சேர்ப்பு முகாம்

 திருவள்ளூர், பிப். 26- தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்  துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவ லகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் பிப்-28 அன்று திரு வள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி  வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும்  திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கு மேற்பட்ட தனியார் துறை நிறு வனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.   இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு,  12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ படித்த வர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்-28 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடை பெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும்  திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்;பு அலுவலக  பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விவரங்க ளுக்கு 044-27660250 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவும் மாவட்ட  ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரி வித்துள்ளார்.