tamilnadu

திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

திருவள்ளூர், ஜூலை 2- திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அடுத்த இடத்தில்  திருவள்ளூர் மாவட்டம் உள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழனன்று (ஜூலை 2) மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த  மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 167 ஆக அதிக ரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 648க்கும் மேற்பட்டோர் குண மடைந்துள்ளனர். 79 பேர் உயிரிழந்தனர்.  1440க்கும் மேற்பட்டோர் சிகிச்சை யில் உள்ளனர்.