tamilnadu

img

ரூ.1.68 கோடி நிலுவைத் தொகை: சிஐடியு போராடி பெற்றுத்தந்தது

திருவள்ளூர், ஜன.29-  காமராஜர் துறை முகத்தில் பணியாற்றிய பெண் ஒப்பந்த தொழி லாளளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப் படாத ரூ.1 கோடியே 68  லட்சத்து 30 ஆயிரம்  நிலு வைத் தொகையை சிஐடியு போராடி பெற்றுத்தந்துள் ளது. காமராஜர் துறை முகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். மீன் பிடி தொழிலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வேலை அளிப்பதாக சொன்ன நிர்வா கம் காட்டுப்பள்ளி, அத்திப் பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 120 நபர்க ளுக்கு வேலை கொடுத்தது. 8 வருடம் வேலை செய்தும்  இவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. 2012ஆம் ஆண்டு இவர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர். பிறகு  சிஐடியு உடன் சேர்ந்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது 120 பெண் தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர் இல்லை. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இவர்க ளுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச கூலிச்சட்டம் பொருந்தாது என நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நிர்வாகத்தை கண்டித்து  பல கட்டப் போராட்டங்கள் நடந்தன. இதனால் குறைந்த பட்ச ஊதியம்  கொடுக்க நிர்வாகம் முன் வந்தது. நாள் ஊதியமாக ரூ. 603, போனஸ் ஆகியவற்றை மூன்று வருட நிலுவையுடன் அளிக்க வேண்டும் என மத்திய துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் கவனத்திற்கு சிஐடியு எடுத்தது சென்றது.  இதனால்  115 பெண் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டு  ஊதிய நிலுவைத்தொகையான, ரூ.1 கோடியே 13 லட்சமும், பி.எப் தொகை  ரூ.30 லட்சத்து 55 ஆயிரமும்,  குறைந்த பட்ச கூலி நிலுவைத் தொகை ரூ. 29 லட்சத்து 61 ஆயிரம் என முழு நிலுவைத் தொகையை காசோலையாக தொழி லாளர்களுக்கு தனித்னியாக மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் மற்றும் மண்டல தொழி லாளர் ஆணையர் ஆகியோர் செவ்வாயன்று (ஜன.28)  வழங்கினார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜ யன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் நரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

;