tamilnadu

img

திருவள்ளுவர் சிலையை அவமதித்த பாஜகவினர்

 தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை,நவ.4- சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்த திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், “தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதற்கும் பேஸ்புக்கில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

‘நெஞ்சம் கொதிக்கிறது’

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தஞ்சாவூர் பிள்ளை யார்பட்டியில், திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனி கின்றது. எனினும் மன்னிக்க முடியாத இச் செயலை செய்த வர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். மேலும், திருக்குறள் காலத்தால் அழிக்க முடியாதது. மனிதகுலம் வாழும் வரை அறநூலாகவே வாழும். திருவள்ளுவரின் புகழ் இந்த மண்ணும் விண்ணும் இருக்கும்வரையில் நீடிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

‘மிருகக் கூட்டம்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“திருவள்ளுவரும், அவர்தம் திருக்குறளும் கடவுள், சாதி, மதம், அரசியல் கடந்த பொதுமறையாகும். வள்ளுவரை எந்த ஒரு தனிமனிதனும் அல்லது அமைப்பும் சொந்தம் கொண்டாட முடியாது. மகத்தான பேரறிஞர் வள்ளுவர்க்கு காவி உடை தறித்து திருநீர் இட்டு, தமிழக பா.ஜ.க.வினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிக்கப்பாளர் அலுவல கங்கள் அருகே உள்ள பிள்ளை யார் பட்டியில், திருவள்ளுவர் சிலையின் முகத்தில் சாணத்தை வீசியும், அவரது இரு கண்களை மூடியும், கறுப்புச் சாயத்தை பூசியும் மிருகக் கூட்டம் இழிவு படுத்தியுள்ளது மிக, மிகக் கடுமை யான கண்டனத்திற்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

‘முகத்திரையை கிழிப்போம்’

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் சமூக வலைதளத்தில் திருவள்ளு வருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டையும் போட்டு, உருத்திராட்சைத் தையும் அணிவித்து - திருவள்ளுவரை இதற்குமேல் எந்த அளவும் கொச்சைப்படுத்த முடியாது என்னும் அளவுக்குத் தங்களின் மோசடிக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர். இந்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில், தஞ்சை பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின்மீது சாணியை வீசியுள்ளனர். 

பாஜக, சங் பரிவார் என்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் எதிரா னது என்பதை கண்கூடாகத் தெரிந்து கொள்வதற்கு  இவற்றை விட வேறு ஆதாரங்கள் தேவையா? மதச்சார்பற்ற சக்திக ளும், தமிழ் உணர்வாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காவிக் கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.



 

;