திருவண்ணாமலை, பிப். 22- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விஜய் (19). கடலாடி பகுதியை சேர்ந்த வர் தமிழ்ச்செல்வன் (19). இருவரும் நண்பர்கள். இவர்கள் வெள்ளியன்று இருசக்கர வாகனத்தில் வளையாம்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். செங்கம் அடுத்த குயிலம் கூட்ரோடு அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கரவாகனம் மோதியது. இதில் விஜய், தமிழ்செல்வன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பாளையம் காவல் துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.