tamilnadu

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் சேர்க்கை இடங்கள் குறைப்பு மாணவர்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஆக. 24- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி யில், மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்  காமல், வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி திங்களன்று (ஆக.24) மாவட்ட ஆட்சியரி டம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து அரசு கலைக் கல்லூரிகளி லும்100 விழுக்காடு மாணவர் சேர்க்கை  நடத்த லாம் என தமிழக அரசு  ஆணை வெளி யிட்டுள்ளது. திருவண்ணாமலை  அரசு கலைக்கல்லூரி யில் 100 விழுக்காடு சேர்க்கை நடைபெற வில்லை என்றாலும், ஆண்டிற்கு இரண்டா யிரம் சேர்க்கை நடைபெறும்.  பல்கலைக்கழக மானியக்குழு வழி காட்டுதல்படி, மேலும் 20 விழுக்காடு கூடுத லான இடங்களில் மாணவர்களை சேர்க்க லாம்  என்ற அடிப்படையில், தொடர்ந்து  மனு அளித்து வருகிறோம். அதனடிப்படை யில் கூடுதலான சேர்க்கை நடைபெறும். மொத்தம் 2200 மாணவர்கள் பயன்பெறு வார்கள். ஆனால், இந்த கல்வியாண்டில், சொற்ப  எண்ணிக்கையில் 1,310 மாணவர்களுக்கான சேர்க்கை மட்டுமே நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க கூடிய இடமாக, அரசு கல்லூரி  செயல்படுகிறது. இந்நிலையில் மாணவர்  சேர்க்கையை குறைப்பது என்பது மாண வர்களின், கல்வியை பாதிக்கும். எனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 2 ஆயிரத்து 200  சேர்க்கையை குறைக்காமல் இந்த கல்வி ஆண்டும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;