tamilnadu

திருவண்ணாமலை: பார்வையற்ற மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி

திருவண்ணாமலை,ஏப்.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பார்வையற்ற மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,085 மாணவர்களும், 14,396 மாணவிகளுமாக மொத்தம் 27 ஆயிரத்து 481 பேர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து, வெள்ளியன்று(ஏப்.19) காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில், 24 ஆயிரத்து 192 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்ச்சி 88.03 சதவீதமாகும். மாவட்டத்தில் உள்ள 134 அரசு பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுதினர். இதில் 14 ஆயிரத்து, 918 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 89 பேர் தேர்வு எழுதினர். இதில் 80 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் கண்பார்வையற்ற 18 மாணவ,மாணவியரில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 27 ஆவது இடத்தில் உள்ளது. 3 அரசுப் பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 26 தனியார் பள்ளிகள் என மொத்தம் 33 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் 90.67 சதவீதமும், 2017 ஆம் ஆண்டு 91.84 சதவீதமும், 2018 ஆம் ஆண்டு 87.97 சதவீதமும் பெற்றிருந்தது. கடந்த ஆண்டை விட திருவண்ணாமலை மாவட்டம் 0.06 சதவீதம் முன்னேற்றம் அடைந் துள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 83.95 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளைப் பொறுத்தவரையில் 23 ஆவது இடத் தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.

;