tamilnadu

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம்

முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணிக் கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்பநல ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மறியல் நடந்தது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.