tamilnadu

கல்குவாரி அமைப்பதை தடுக்க கோரிக்கை

 

திருவண்ணாமலை,ஜன.29- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில். கல் குவாரி அமைப்பதை  தடுத்து நிறுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:- நம்பேடு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவிலும், செப்டாங்குளம் கிராமத்தில் 45 ஏக்கர் பரப்பளவிலும், கிராம   மக்கள் விவசாய சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கிராமத்தி லிருந்து, அரை கிலோ மீட்டர் தொலைவில், தாடி நொளம்பை  பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய கல்குவாரி  ஒன்று இயங்கி வருகிறது.  அந்த கல்குவாரியால், கிரா மத்தில் உள்ள விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நம்பேடு கிராமத்தில் மேலும் ஒரு  கல்குவாரி  அமைக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த புதிய  கல்குவாரி அமைய உள்ள இடத்தில், கிராம மக்கள் விவசாய சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு மிகப்பெரிய பழமை வாய்ந்த குளம் ஒன்று அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதி யில் கூடுதலாக ஒரு கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தி,  தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

;