tamilnadu

img

வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்  ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அத்திமூர் விக்கிரமன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ப.செல்வன்,  தாலுகா செயலாளர்  சிவாஜி, நிர்வாகிகள்  உதயகுமார், சி.ஏ. செல்வம், ரவிதாஸ், வீரமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

*******************

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் மாவட்ட கவுன்சிலர் வார்டு எண் 29-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேன்மொழி மனு தாக்கல் செய்தார்.

*******************

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி. கொத்தங்குடி ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரக்குழு உறுப்பினர் கோபால் வேட்புமனு தாக்கல்  செய்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, நகரக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

;