tamilnadu

img

வருவாய் வழி திறன் தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் சாதனை

திருவண்ணாமலை, ஏப்.24-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 9 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மிகாமல் உள்ள, அரசு, நகராட்சி, நிதியுதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இந்த வருவாய்வழி மற்றும் திறன் தேர்வில் பங்கேற்கலாம். அவர்தம் ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்சி,எஸ்டி மாணாக்கர் 50 சதவீதமும், பிற மாணாக்கர் 55 சதவீதம் மதிப்பெண்களும் பெற்ற மாணாக்கர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள். இதனடிப்படையில் கடந்த 2018 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை திருவண்ணாமலை மாவட்டத் தில் இருந்து 7659 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 253 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு தலா ரூ.12,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேற்படி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணாக்கர்களை திருவண்ணாமலை முதன் மைக் கல்வி அலுவலர் பாராட்டி பரிசளித்தார். 

;