திருவண்ணாமலை, ஜுன் 1- திருவண்ணாமலை அருகே மல்லவாடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கூடுத லாக பணம் (லஞ்சம்) கேட்பதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 39 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களும், 13 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களும் உள்ளன. மல்லாவடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அப்பகுதியை சுற்றியுள்ள கருத்துவாம்பாடி, துரிஞ்சாபுரம், மங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக கேட்கிறார்கள். அவ்வாறு கூடுதல் பணம் கொடுக்காத விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்ற னர். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்ற னர். இதைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் தமிழக விவ சாயிகள் சங்கத்தினர் மல்லவாடி நெல் கொள்முதல் நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.