tamilnadu

இருளர்களுக்கு குடிமனைப் பட்டா!

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி வெடால் கிராமம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் எஸ்.அம்பேத் குமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மழையிலும், வெயிலிலும் வாழ்ந்து கொண்டு வரும் இருளர் இன மக்களின் துயரை துடைக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். அந்த மக்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அந்த இடங்களில் ஆட்சேபனை இல்லை என்றால் பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெடால் கிராமத்தில் வசித்து வரும் இருளர் இன மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் கூறினார். அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களுக்கு ஆட்சியர் வேலை இல்லாத இடங்களில் வரன்முறை செய்து பட்டா வழங்கும் திட்டம் கால நீட்டிப்பு செய்யப்படும் தடை உள்ள மாவட்டங்களிலும் சிறப்பு உத்தரவு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. நத்தம் புறம்போக்கு பட்டா வழங்க அரசுக்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

கேள்வி நேரத்திலிருந்து...