tamilnadu

ஊராட்சி செயலாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை, பிப்.13- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்கள் 4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  ஊராட்சி செயலாளர்கள் பதவிக்காலம் முடிவடைந்து ஒருமாத காலம் நிறைவடைந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கிராம ஊராட்சியின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருந்தது மற்றும் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை சரிவர பராமரிக்காத காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார் அதனடிப்படையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் ஊராட்சி செயலர் எஸ்.ரோஸ், அண்டம்பள்ளம் ஊராட்சி செயலர் என்.வசந்தி, மலப்பாம்பாடி ஊராட்சி செயலர் ஆர்.பாலசப்பிரமணியம், கல்லேரி ஊராட்சி செயலர் பி.பச்சையப்பன் ஆகியோரை தற்காலிக பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.