tamilnadu

திருவண்ணாமலையில் 19.91 லட்சம் வாக்காளர்கள்

திருவண்ணாமலை, டிச. 23-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வரைவு  வாக்காளர் பட்டியலை திங்களன்று (டிச. 23) வெளியிட்டார். பட்டியலில் 9 லட்சத்து 79,699 ஆண்கள், 10 லட்சத்து 11,747  பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 90 பேர் உட்பட மொத்தம்  19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் 6,931 புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரு முறை பதிவு அடிப்படையில் 4,833 வாக்காளர்கள் நீக்கப்  பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடி மையங்கள், துணை ஆட்சியர், வட்டாட்சியர் அலுவல கங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர்  பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணை யதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். புதிதாக பெயர்  சேர்க்க, சுருக்கம் திருத்தம் செய்ய டிச. 23ஆம் தேதி முதல்  ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை படிவங்கள் வழங்கப்படு கிறது. பெயர் சேர்க்க படிவம் - 6, நீக்க படிவம்-7, திருத்தம்  செய்ய படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம்  செய்ய படிவம் - 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர்  சேர்க்க படிவம் - 6ஏ ஆகியவற்றில் பூர்த்தி செய்து விண்ணப்  பிக்க வேண்டும்.