திருப்பூர், ஜூலை 12- திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் கார்டன் பகுதி யில் இளைஞர் ஒருவர் கோரமான முறையில் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதி யில் தங்கி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சனியன்று இரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிள வர் நகரில் இவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுக் கிடந்தார். திருப்பூர் சென்ட்ரல் காவல் நிலைய போலீ சார் இவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் உடல் அருகே இருந்த பட்டா கத்தி மற்றும் அரிவாளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.