tamilnadu

img

உடுமலை: போனஸ் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, அக். 17- அனைத்துப்பிரிவு தொழிலாளர்களுக் கும் நியாயமான போனஸை வழங்க வேண் டும் என வலியுறுத்தி உடுமலையில் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடைகள் மற்றும் நிறுவனங்கள், தனி யார் மருத்துவமனைகள், பனியன் நிறு வனங்கள், பஞ்சாலைகள், காற்றாலை நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டி நிறு வனங்களில் என பல்வேறு பிரிவுகளில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதி களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். சட்டப்படியான போனஸை 15 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடுமலை தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கம் சார் பில் சிஐடியு தலைவர் ரங்கநாதன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.