tamilnadu

img

இலக்கியப் போட்டியில் வென்றவர்களுக்கு திருப்பூர் புத்தகத் திருவிழாவில் பரிசளிப்பு

திருப்பூர், பிப். 5 – 17ஆவது திருப்பூர் புத்த கத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இலக்கியத் திறன் ஆய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 210 மாணவ, மாணவி யருக்கு புத்தகத் திருவிழாவில் பரிசளிக்கப்பட்டது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெறும் புத்த கத் திருவிழா வளாகத்தில் செவ் வாயன்று மாலை, திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிச ளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.ரமேஷ் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு சார்பில் கே. தினேஷ் வரவேற்றார். மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ச.முருகதாஸ், ஆண்டவர்  ஏ.ராம சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் திருப் பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்து, சிறப்புரை ஆற்றி னார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: சாமானிய குடும்பத் தில் பிறந்த நான் புத்தகங்கள் மூல மாகவே உயர்ந்த பொறுப்புக்கு வர முடிந்தது. புத்தக வாசிப்புத்தான் மனிதர்களை உயர்த்தும். இன்று இளைஞர்கள், மாணவர்கள் செல் போன்களில் மூழ்கியுள்ளனர். ஆசிரியர்கள் அவர்களை மீட்கும் பணியைச் செய்ய வேண்டும். செல்போன்களுக்குப் பதிலாக புத்தகங்களை வாசிப்பதன் மூலமே இன்றைய இளைய தலை முறை மாணவர்கள், இளைஞர் கள் புதிய உயரத்தை எட்ட முடி யும் என்று சஞ்சய்குமார் கூறி னார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக் குமார் வாழ்த்திப் பேசினார். இவ்விழாவில் திருப்பூர் மாவட்டத் தின் 10 மையங்களில் நடத்தப் பட்ட ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் கள், ஆறுதல் பரிசு பெற்றோர் மற் றும் அறிவியல் கண்காட்சி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றோர் என மொத்தம் 210 பேருக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ், ரொக்கம், புத்தகம்  வழங்கப்பட்டன. இவ்விழாவில் பெற்றோர், மாணவ, மாணவியர் உள்பட வாச கர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

;