tamilnadu

img

திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சி

திருப்பூர், ஜன. 23 - திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வியாழனன்று நாணயவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.  பல்லடம் தமிழ் பண்பாட்டு மையம், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம், இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுக்கு கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நசீம் ஜான் தலைமை தாங்கினார். இதில் சங்க கால நாணயங்கள் முதல் நாயக்கர் கால நாணயங்கள் வரை சுமார் நூறு நாணயங்கள் விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. வர லாற்றுத் துறை பேராசிரியர்களும், 3500 மாணவிகளும் இதில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நாணயங்களைப் பார்வையிட்டனர். நாணயவியல் ஆய்வு மூலம் பண்டைய வரலாறு, பண்பாடு, நாகரிகத்தை அறிந்து கொள்ளலாம். நாணயங்களை வெளியிட்ட மன்னர்கள் பெயர்கள், பரம்பரை, அவர்கள் பின்பற்றிய சமயம், வணங்கிய தெய்வம், ஆட்சிமொழி, எழுத்து வகை, வடிவமைப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக நிலை ஆகியவற்றை அறிவதுடன், பெரு மளவில் நாணயங்கள் கிடைக்கும் இடங் களை வைத்து மன்னர்களின் ஆட்சிப் பரப்பை அறியலாம் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் தமிழ் பிராமி, பல்லவ கிரந்தம்,  பல்லவர் காலத் தமிழ், சோழர்கள் கால கிரந்தம், தமிழ், நாகரி, பாண்டியர் காலத் தமிழ், நாகரி, பாண்டியர் காலத் தமிழ் உள்ளிட்ட பல்வேறு கால கட்ட எழுத்து வடி வங்கள், பலதரப்பட்ட காசுகள் அந்தந்த காலத்தின் சான்றுகளாக இருக்கின்றன. நாணயங்கள் வட்டம் மற்றும் சதுரமாக வெளியிடப்பட்டு இருந்தன. இங்கு ரோ மானிய காசுகளும் அதிகம் கிடைத்துள்ளன. முத்திரை நாணயங்களில் காணப்படும் சின்னங்கள் பலதரப்பட்ட விசயங்களைக் குறிக்கின்றன. குறிப்பாக மரம் வேலிக் குட்பட்ட மரம், வளை முகடி, என பல் வேறு முத்திரை அடையாளங்களும் வெளி யிடப்பட்டுள்ளன என அவர்கள் கூறினர்.

;