tamilnadu

செய்தியாளரை மிரட்டிய டிக்-டாக் பெண் மீது வழக்குப்பதிவு

திருப்பூர், ஜூன் 20- கொரோனா மருத்துவப் பரிசோதனைக்கு ஒத் துழைக்காததாக செய்தி வெளியிட்ட தொலை காட்சி ஊடக செய்தியாளரை மிரட்டி வீடியோ வெளி யிட்ட டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் ரௌடி பேபி சூர்யா என  சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.

சிங்கப்பூர் சென்றிருந்த இவர் உள்ளிட்ட பலர் அரசு சிறப்பு விமா னங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். சூர்யா கடந்த 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந் தார். இவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் காவல்துறையினருக்கும், சுகாதாரதுறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ள னர். விரைந்து வந்த காவல்துறையினர் இவரை ஆம்பு லன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் தனக்கு கோவையில் கொரோனா பரி சோதனை மேற்கொண்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தன்னை அனுப்பி  வைத்தனர் என கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்ததால் அரசு மருத்துவ மனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்ய முடியாமல் போனது. மீண்டும் அன்று இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்ற  சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இவரின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த நிருபர் அளித்த புகா ரின் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம்  294(பி), 500 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளில் ஆபாச மாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;