tamilnadu

img

ஆளும் கட்சி மோசடி செய்யவே  உள்ளாட்சி தேர்தலை பிரித்துப் பிரித்து நடத்துகிறார்கள் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர், டிச. 4 – தமிழகத்தில் ஆளும் கட்சியினர் மோசடி செய்வதற்காகவே உள்ளாட்சித் தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்து கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் செவ்வாயன்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க முன் னாள் மாவட்டத் துணைத் தலைவர், மறைந்த தலைவர் வி.பி.சாமிநாதன் படத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று வி.பி.சாமிநாதன் உருவப்படத்தைத் திறந்து வைத்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை தேர்தல் வருமா, வராதா என்ற நிலைதான் இருந்து கொண் டிருக்கும். மூன்றாண்டு காலம் தேர்தலை நடத்தாததற்கு ஆளும் அதிமுக அரசுதான் காரணம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் தேர்தல் நடத்தவில்லை என்கிறார்கள். ஆனால் எந்தவொரு நீதிமன்றமும் தேர்தலை நடத்துவதற்குத் தடையாணை விதிக்கவில்லை. நீதிமன் றத்தில் ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதியை அறிவிக்க தவணை கேட்டது தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணைய மும்தான். இப்போதுகூட உச்சநீதிமன்றம் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சி சட்ட நடைமுறைகளை உள்ளடக்கி தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட் டதால்தான் தேர்தலை நடத்துவதாக அறி வித்துள்ளனர். அதிலும் கிராம ஊராட்சிகளுக்குத்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, திருப்பத் தூர் மாவட்டங்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஒரே மாவட்ட ஊராட்சிக்குத் தேர்தல் என அறிவித்தி ருக்கின்றனர். 3 கலெக்டர், 3 எஸ்.பி., இருக்கும் நிலையில் மாவட்ட ஊராட்சிக்கு எந்த கலெக்டர் தலைவராக இருப்பார்? மேலும் இதுவரை தமிழ்நாட்டில் இல்லாதபடி, 50 சதவிகித பகுதிகளுக் குத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. நகர்ப் புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கின்றனர். இதன் மூலம் ஏராளமான மோசடிகள் செய்ய, தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் தாண்டி  தேர்தல் நடந்தால் மோசடி செய்து,  தோற்றவர்களை வெற்றி பெற்றவர்க ளாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை. எப்படி இருந்தாலும் எதிர்க் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம். இப்போது பொங்கல் பண்டிகையைக் காரணம் காட்டி ரூ.2 ஆயிரம்கோடியை அள்ளிவீசுகிறார்கள்.மக்களுக்குப் பணம் கொடுப்பதைவேண்டாம் என்று சொல் லவில்லை, ஆனால் அரசியல் உள்நோக் கத்துடன் கொடுப்பதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.

பாஜக ஆட்சி; நாட்டின் கதி என்ன?
பாஜக ஐந்தாண்டு ஆட்சி முடியும்போது இந்த நாடு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. காஷ்மீர் மாநிலத்தையே திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினரான மூத்த தலை வர் பரூக் அப்துல்லாவை கைது செய்தி ருந்தால் அறிவிக்க வேண்டும், அப்படி அறிவிக்கவும் இல்லை. ஆனால் அவரை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் மாநிலம் என்ற ஒரே கார ணத்துக்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டார்கள். 370 பிரிவைப் போல் 371 பிரிவில் பல மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, அவற்றையெல்லாம் ரத்து செய்தார்களா?  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது, ஆனால் நீதி வழங்கப்பட வில்லை. நீதிமன்றம் கூட நரேந்திர மோடி ஆட்சியின் அங்கமாக மாறிப் போயிருக் கிறது. சபரிமலை வழக்கில் ஏற்கெனவே 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பெண்கள் கோயிலுக்கு சென்று வழிபடலாம் என தெளிவாகத் தீர்ப்பளித்தனர். ஆனால் இப்போது 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், 2 நீதிபதிகள் ஒரு தீர்ப்பை யும் கொடுத்து, 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியுள்ளனர். இதன் மூலம் தேவையற்ற குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. மார்க் சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை வழி பாட்டு அடிப்படையில் சாதிரீதியாகவோ, பாலினரீதியாக பெண்கள் என்பதாலோ பாகுபாடு காட்டக் கூடாது, அவர்களுக் குள் பாகுபாடு கிடையாது என்பதே எங் கள் நிலைபாடு. ஜனநாயகத்தில் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை மூன்று தூண்கள் என்கிறார்கள். ஆனால் இப் போது இந்த மூன்றும் ஒற்றைத்தன்மை கொண்ட ஒரே தூணாக மாறியிருக்கின் றன. கிராமப்புற பட்டினிச் சாவைத் தடுக் கும் கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக் கப்படுகிறது. அதையும் முறையாக கொடுப்பதில்லை. ஆனால் இந்த நாட்டின் கார்ப்பரேட்டுகளுக்கு பட்ஜெட்டில் ரூ.2.80 லட்சம் கோடிசலுகை அளிக்கப்பட்டது, அதன்பிறகும் அவர்களுக்கு ரூ.1.95 லட்சம் கோடி சலுகை வழங்கினர். இப் போது ரூ.1.45 லட்சம் கோடி வரிச் சலுகை அறிவித்துள்ளனர். இவையெல் லாம் மிகப்பெரிய அதானி, அம்பானி களுக்குப் போய்ச் சேருகிறது. கார்ப்பரேட் டுகளுக்கு தவணை, தவணையாக சலுகை வழங்கும் பாரதிய ஜனதா அரசு விவ சாயிகளுக்கு சல்லிப் பைசா கடன்  தள்ளுபடி செய்யவோ, சலுகை வழங்கவோ மறுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுக்கு மாதம் 30ஆம் தேதியானால் சம்பளம் பட்டு வாடா செய்யப்பட்டுவிடுகிறது. ஆனால் இந்த அரசு கிராமப்புற நூறு நாள் தொழி லாளர்களுக்கு நான்கு மாதம், ஐந்து மாதம் என சம்பள பாக்கி வைத்திருக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். அங்கு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 8 மாத சம்பளத்தை வழங்காமல் பாக்கி வைத்திருக்கின்றனர். ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அடி மாட்டு விலைக்கு விற்கிறார்கள். இது என்ன மோடி, அமித்ஷாவின் குடும்பச் சொத்தா? இந்திய மக்களின் சொத்து! சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற  பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுகிறார்கள். ராணுவ தளவாடத் தொழிற் சாலைகளை திருச்சி துப்பாக்கி தொழிற் சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவற்றை ஏலம் போடுகிறார்கள்.  பொருளாதார நெருக்கடியைக் கார ணம் காட்டி முதலாளிகளுக்கு அதிக சலு கைகள் தருகிறார்கள். நெருக்கடி அதிக ரிக்கும்போது, மக்கள் நலத் திட்டங்களை குறைக்கிறார்கள். அத்துடன் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்கிறார்கள். நாட்டில் 600க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. அவற்றையும் தாரை வார்க்கிறார்கள்.  70 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக் கிய கட்டமைப்பைச் சீர்குலைத்து சின் னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை யையே மாற்றி புதிய சாசனத்தை உருவாக்க துவேஷத்துடன் செயல்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனச் சொல்லி ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தாய் மொழி தமிழ் புறக்கணிக்கப்படுகிறது, உல கப் பொதுமறை திருக்குறள் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறதா? சமஸ்கிருதம் திணிப்பு செய்கின்றனர். இவ்வாறு பிரம்மாண்டமான தாக்குதல் ஏவிவிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வாய்மூடி இருக் கின்றன. இன்றைய மத்திய ஆட்சியாளர்க ளின் கொள்கைக்கு விதை ஊன்றியது காங்கிரஸ்தான் என்பதால் அவர்கள் வாய் திறக்க முடியவில்லை. தமிழ்நாட்டில்தான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய பாஜக அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.தமிழகம் மட்டும் போராடி நாடு முழுவதும் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அமைச்சர்களிடம் நமது எம்.பி.க்கள் மனுக் கொடுத்தால் சிலையிடம் மனுக் கொடுத் தது போல் வாங்கி வைத்துக் கொள்கிறார் கள், வேறதுவும் செய்வதில்லை. இந்தியா மிகப்பெரும் ஆபத்தை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இதை எதிர்த் துக் களம் காணக்கூடியவர்களாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி களும் இருக்கிறார்கள். ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத் தத்துக்குத் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் கிராமப்புற மக்கள் மிகப்பெரும் எழுச்சிக்குத் தயாரா கிக் கொண்டிருக்கிறார்கள். மகத்தான எழுச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமை ஏற்கும். நூறாண்டு பெருமை மிகு வரலாறு கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டை யும், நாட்டு மக்களையும் பாதுகாக்கப் போராடும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அப்பு சாமி ஆகியோர் உரையாற்றினர். முன்ன தாக ஈட்டிவீரம்பாளையம் கிளைச் செய லாளர் சுப்பிரமணியம் தலைமை ஏற்க, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.கருப்ப சாமி வரவேற்றார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.கோபாலகிருஷ் ணன், கே.ரங்கராஜ், வி.பி.சாமிநாதன் குடும்பத்தினர் உள்பட கட்சி அணியினர், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மார்க் சிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் பகுதி கிளைகள் சார்பில் சிவலிங்கம் நன்றி கூறினார்.

;