tamilnadu

img

பிஏபி பிரதான கால்வாயில் சிதிலமடைந்த தலைப்பகுதி தண்ணீர் வழங்குவது பாதிப்பு: சீரமைப்பது எப்போது?

திருப்பூர், ஜன. 25 - பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் பிரதான கால்வாயின் தலைப் பகுதி மிக மோசமாக சிதிலம டைந்து இருப்பதால் தண்ணீர் வழங்குவது கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பல மாதங்க ளாக இந்நிலை நீடிப்பதால், எப்போது சீரமைக்கப்படும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பு கின்றனர். பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால் வாய் வழியாக வெள்ளகோவில் வரை உள்ள மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. தற்போது திங் கள்கிழமை (நாளை) முதல் முதலா வது மண்டலப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க உள்ளனர். இந்நி லையில் பிரதான கால்வாயின் தலைப் பகுதி, அதாவது திரு மூர்த்தி அணையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டரில் தொடங்கி, தீபாலபட்டி வரை 7 ஆவது கிலோமீட்டர் வரை கால் வாயின் இருபக்கமும் உள்ள சுவர்கள் மிக மோசமான முறை யில் சிதிலமடைந்து உள்ளன. இப்படி இருப்பதால் அணை யில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் எடுக்க முடியுமா என்ற அச்ச மான நிலை உள்ளது. கால்வாய் உடையக்கூடிய ஆபத்தும் உள்ளது. அத்துடன் தண்ணீர் விரயமும் ஏற்படும். இத்தகைய சூழலில் கடைமடை வரை தண் ணீர் சென்று சேருமா என்ற ஐயப்பாடு உள்ளது. எனவே பிர தான கால்வாயின் தலைப்பகு தியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறியதாவது: பல மாதங்களாக பிஏபி பிரதான கால்வாயின் தலைப்பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதி கரிசல் மண்ணாக இருப்பதால் இதைச் சீரமைப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்ப டுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு, பொதுப்பணித் துறையின் சென்னை அலுவல கத்தில் இருந்து மண் ஆய்வுப் பிரிவினர் இங்கு வந்து பரிசோ தனை செய்து சென்றனர். அத்து டன் இப்பகுதியைச் சீரமைக்க ரூ.48 கோடிக்கு மதிப்பீடு தயா ரித்து பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் 18 மாத காலம் கடந்தும் நிதி ஒதுக்கீடு செய்யவோ, பரா மரிப்புப் பணியைத் தொடங்கவோ இல்லை.  இதை விட மலைப் பகுதியில் அமைந்துள்ள காண்டூர் கால்வா யிலும் மிக மோசமாக சிதிலம டைந்து இருந்தன. அங்கு கூட 60 சதவிகிதமான பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் பிஏபி திட்டத்திற்கு ஆதாரமான தலைப் பகுதியிலேயே உள்ள இந்த சிதி லமான நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே தற்போது நீர் திறப்புக் காலம் முடிந்து தண் ணீர் விடாத கால கட்டத்தில் இப்ப ணியை மேற்கொள்ள வேண் டும். வரக்கூடிய கோடை காலத் தில் மழைப்பொழிவு இல்லாத சமயம், கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் சீரமைப் புப் பணியை மேற்கொண்டு விரைந்து நிறைவேற்றினால், இத்திட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். இதற்கு அரசு உடனடியாக உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

;